சோழ மக்கள் வாழ்க்கைமுறையைப்பற்றி இத்தளத்தில் பதிய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்த எழுத்துக்களே பின்வருபவை. வரலாற்றுக் கதையுலகின் முடிசூடா மன்னர்களுள் ஒருவரான "சாண்டில்யன்" அவர்களின் "கன்னி மாடம்" புதினத்தின் 43 ஆம் அத்தியாயத்தின் துவக்கத்தில் மிகத்தெளிவாக சோழர்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி விளக்கியுள்ளார் (தலைநகர மக்கள்).இந்நாவலில் குறிப்பிடப் பட்டுள்ள அரசன்: இரண்டாம் ராஜாதிராஜன்
ஆட்சிக் காலம் : கி.பி.1163-1178
கங்கையினும் புனிதமான காவிரியின் பாய்ச்சலால் பயிரும் மன்னுயிரும் செழித்துச் சிறந்து ஓங்கிய சோழ மண்டலத்தின் தலைநகரன்களுள் ஒன்றான கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரம்மாண்டமான கட்டடங்களின் கிரீடங்கள், சற்று தூரத்தே தெரிந்த சோழமங்கலம் என்ற ஏரியின் பெரிய நீர்ப்பரப்பில் பிரதிபளித்துக்கொண்டிருந்தன. வடநாடு வென்று வாகைசூடிய ராஜேந்திரன் வல்லமைக்கும் தமிழ்ச் சிற்பிகளின் கைத்திறனுக்கும் அடையாளமாக விளங்கிய அந்த நகரத்தின் கோட்டைச் சுவர்களை திடீரென்று அணுக பயந்த காலைச் சூரியன் எதிரேயிருந்த சொலைமரங்களின் இடுக்குகள் வழியாக தன் கிரகானங்களைச் செலுத்தி பார்க்கத் தொடங்கினான். நகரத்துக்கு நாயகமாக விளங்கிய சோழன் கேரளன் என்ற பிரசித்தி பெற்ற மன்னர்பிரான் அரண்மனையில் இன்னிசைக் கருவிகளின் உதயநாதம் எழும்பி, அரண்மனைச்சுவர்களில் தாக்கி அரண்மனையையே நாதமயமாக அடித்துக் கொண்டிருந்தது.அரண்மனையை அடுத்தாற்போல் எவலாலருக்காக நிர்மானிக்கப்பட்டிருந்த "திருமஞ்சனத்தார் வேள" த்தில் விடியுமுன்பே ஏற்பட்ட வேலைப்பரபரப்பு, கதிரவன் தலைகாட்டியதும் அதிகமாகி ஏவலாளர் அங்குமிங்கும் அதிவேகமாக நடமாடிக்கொண்டிருந்தாலும், மன்னன் தியிலேழாத காரணத்தால் சப்தம் சிறிதும் தெரியாமல் அடி மேல் அடி வைத்து நடந்துகொண்டிருந்தனர். ஆனால் மன்னற்கு மன்னனாய், உயிருக்கெல்லாம் பேருயிறாய் விளங்கி வந்தவனும், ஒன்பதாம் திருமறையில் சேர்க்கப்பட்டுள்ள கருவூர்த்தேவரின் பதிகமொன்றில் சிறப்பிக்கப்பட்டவனுமான சிவபெருமான் உறையும் கங்கைகொண்ட சோழேசுரத்தின் சங்கங்கள் பூம்பூம் என்று சப்தித்துக் கொண்டிருந்ததன்றி மேளவாத்தியங்களும் பலமாக முழங்கிக்கொண்டிருந்தன. நூறடிச் சதுரமாக அமைந்துள்ள அந்த நூற்றெழுபதடி உயரமுள்ள ஒன்பது அடுக்குச் சொழேச்சரக் கோபுரமும் ராஜராஜன் சிருஷ்டித்த தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தன் நிழழை எந்த இடத்திலும் பாய்ச்சாது கர்வத்துடன் ஆகாயத்தில் தலைநிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது. அந்த கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளும் ஒற்றைச் சிவலிங்கமும் சிங்கத்தின் வயிற்றில் சிங்கமே பிறக்கும் என்பதைப் போல் இராஜராஜன் வயிற்றில் பிறந்த இராஜேந்திர சோழன் கலை உணர்ச்சியில் தந்தைக்குச் சிறிதும் சளைத்தவனல்ல என்பதற்கு சான்றுகளாக விளங்கின. இத்தனை அழகான நகருக்கு மெருகு கொடுக்காதிருப்பது தவறு என்ற எண்ணத்தால் மெள்ள மெள்ள நகரத்தின் மதில்களையும் சொழேச்சரத்தின் தங்கக் கவசங்களையும் அரண்மனையின் கிரீடங்களையும் தழுவத் தொடங்கிய சூரிய கிரகணங்கள் சோழ சங்கத்தின் நீர்ப்பரப்பிலும் பாய்ந்து வெள்ளி அலைகளைத் தரைக்கு அனுப்பிக்கொண்டிருந்தன. சூர்யோதத்தை உணர்ந்துவிட்ட அரண்மனைக் கோட்டத்திலிருந்த போர் யானைகள் அசைந்தாடி எழுந்திருந்து திரும்பித் திரும்பி உடலை முறித்துத் துதிக்கைகளை உயர்த்தி பிளிறியதால் ஏற்பட்ட சத்தம் நகரத்துக்குப் புறம்பே கிடந்த சோலைகளை ஊடுருவிச் சென்றது மட்டுமன்றி, கட்டட மதில் சுவர்களையும் தாக்கிப் பயங்கரமாக எதிரொலி செய்தது. விடியற்காலையிலேயே திருமஞ்சன நீரைக் கொண்டுவரச் சொழகங்கத்துக்கு ஒட்டி செல்லப்பட்ட கோவில் யானைகள் நீரில் விழுந்து பெரிய அலைகளைத் தரையில் மோதவிட்டும் துதிக்கையால் நீரை உறிஞ்சி ஆகாயத்தில் வானம் போல விட்டும் விளையாடிக்கொண்டிருந்தன. இரவுக்காவலருக்கு ஓய்வளிக்கக் காவல் மற்ற வேண்டிய வீரர்கள் பலர் புரவிகளில் ஏறி கனவேகமாகச் சென்று கொண்டிருந்ததால் ராஜவீதிகளில் ஏற்பட்ட குதிரைக் காலடிகள் நகரமெங்கும் பலமாக சப்தித்துக் கொண்டிருந்தன. கடைவீதிகள் திறக்கத் தொடங்கியதால் பாத்திரங்களின் சப்தமும், உருண்டோடிய கட்டைவண்டிகளின் அரவமும், ஒரு பக்கத்திலிருந்து வீசிக் கொண்டிருந்த பூக்களின் வாசனையும் கங்கைகொண்டசொழபுரத்தின் பகற்கால நடவடிக்கைகள் துவங்கிவிட்டதை உணர்த்தின. பகல் வேலையில் முதல் ஜாமத்தில் சப்திக்க வேண்டிய உதயகாலத் தாரைகள் கோட்டை வாசலில் திரும்பாத் திரும்ப முழங்கத் துவங்கின. ஏரியில் ஸ்நானம் செய்வதற்காகத் தோளில் பட்டாடைகளையும் செவ்விடைகளில் குடங்களையும் தாங்கி நடந்த அந்த சோழபுர மங்கையரின் செங்கை வளையல்கள் குலுங்கியதாலும் கால்கொலுசுகள் முரன்று பாடியதாலும் ஏற்பட்ட இன்பகீதத்தை மாற்ற நீடுகளுக்குக் காட்டுவதற்காகக் காற்றுக் கடவுள் தன்னுடைய தென்றல் தூளியில் தூக்கி எடுத்துக்கொண்டு துரிதமாக வடக்கு நோக்கி செல்லலானான்.சூர்யோதத்தால் தட்டி எழுப்பப்பட்ட கறவைகளும் கன்றுகளும் காளைகளும் ஆயர்களால் ஓட்டிச் செல்லப்பட்டு மந்தைமந்தையாய் நகரத்துக்கு வெளியே தொலைதூரத்தில் கிடந்த மேய்ச்சல் வெளிகளுக்காகச் சென்றுகொண்டிருந்தன. ஆயர்கள் நான்குபுறத்திலும் ஓடி மந்தையிலிருந்து பிரிந்த கன்றுகளை விரட்டி அடக்கியும், மந்தையில் புகுந்து முட்டிய மாடுகளை கழியால் புடைத்து அடக்கியும், இடையில் கிடைத்த சிலவினாடிகளில் உல்லாசமாகப் பாடிக்கொண்டும் போய்க்கொண்டிருந்தனர். சோழகங்கத்தின் நீர்ப்பரப்பாலும் காவிரித்தாயின் வாய்க்கல்களாலும் வருடம் பூராவும் பாசனம் கிடைத்துக்கொண்டிருந்ததால் சதாசர்வகாலமும் பயிர்த்தொழில் நடந்து, "சோழவள நாடு சோறுடைத்து" எனும் பெருமையை உலகத்துக்கு அறிவித்துக்கொண்டிருந்த சோழ மண்டலத்தின் அந்த கோ நகரத்தின் கழநிவெளிகள் பச்சைப் பசேலென்று பெரிய பெரிய பயிர்ப்பாளங்களை நகரத்தைச் சுற்றி விரித்திருந்தன."ஓங்கு பெருந்செந்நெலூடு கயலுகள், பூங்குவளைப் போதிற் பொறிவண்டு கண்படுப்ப" என்று ஆண்டாள் கண்ட கனவைப் பதினொன்று பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் நனவாக்கித் தந்தது சோழர் அரசகுலம்.
No comments:
Post a Comment