Saturday, February 14, 2009

கல்வி, இலக்கியம்

சோழர் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.கோயில்கள், மடங்கள் தவிர பல்வேறு கல்விக்கூடங்களும் கல்வியைப் பரப்பி வந்தன. எண்ணாயிரம், திருமுக்கூடல், திருபுவனை ஆகிய இடங்களில் உள்ள சோழர்களின் கல்வெட்டுக்கள் அங்கு செயல்பட்டுவந்த கல்லூரிகள் பற்றிய விவரங்களை எடுத்துரைக்கின்றன. வேதங்கள், இதிகாசங்கள் தவிர, கணிதம், மருத்துவம் போன்றவையும் இந்த கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்பட்டன. இந்த நிறுவனங்களை நடத்துவதற்கு ஏராளமான நிலக் கொடிகள் வழங்கப்பட்டிருந்தன.
தமிழ் இலக்கிய வளர்ச்சி சோழர் காலத்தில் அதன் உச்சத்திற்கே சென்றது எனலாம். திருத்தக்கதேவர் எழுதிய சீவகசிந்தாமணி மற்றும் குண்டலகேசி என்ற நூல்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவை.கம்பர் எழுதிய பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் சோழர் காலத்தில் படைக்கப்பட்ட சிறந்த நூலாகும்.முதலாம் குலோத்துங்கனின் கலிங்கப் படையெடுப்பை விவரிப்பது ஜெயங்கொண்டார் எழுதிய "கலிங்கத்துப்பரணி".ஒட்டக்கூத்தரின் "மூவர் உலா" மூன்று சொழமன்னர்களைப் பற்றியது.புகழேந்திப் புலவர் நளவெண்பாவைப்படைத்தார். தமிழ் இலக்கிய நூல்களான கல்லாடனாரின் கல்லாடம் என்ற நூலும், சமண முனிவரான அமிர்தசாகரர் படைத்த யாப்பெருங்கலமும், பவநந்தி முனிவரின் நன்னூலும், புத்தமித்திரர் படைத்த வீரசோழியம் என்ற நூலும் சோழர் காலத்தை சேர்ந்தவையே.